திருநெல்வேலி,நவ.19:-
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், “மக்கள் குறை தீர்க்கும் நாள்” கூட்டங்கள், ஒவ்வொரு புதன்கிழமையும், அந்தந்த மாவட்ட மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், நடைபெற்று வருகின்றன.

அதன்படி இன்று {நவம்பர்.19} புதன் கிழமை திருநெல்வேலியில், பாளையங்கோட்டை “அண்ணா விளையாட்டு அரங்கம்” அருகே உள்ள, திருநெல்வேலி “மாநகர காவல் ஆணையர்” அலுவலகத்தில், “மக்கள் குறை தீர்க்கும் நாள்” கூட்டம் நடைபெற்றது.
இன்றைய கூட்டத்தில், மொத்தம் 9 நபர்கள் கலந்து கொணடு, தங்களது புகார் மனுக்களை, காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணியிடம், வழங்கினர்.
“பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது, சரியான நடவடிக்கை மேற்கொண்டு, உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும்!” என, மாநகர காவல் ஆணையர், “உறுதி” அளித்தார்.
இதில், மாநகர காவல் துணை ஆணையர்கள், மேற்கு டாக்டர்.V.பிரசண்ண குமார், கிழக்கு V.வினோத் சாந்தாராம், தலைமையிடம் S.விஜயகுமார் ஆகியோரும், பங்கேற்றிருந்தனர்.
இதுபோல, பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் பகுதியில் உள்ள, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற “மக்கள் குறை தீர்க்கும் நாள்” கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்றார்.
அவரிடம், மொத்தம் 18 பேர் மனுககளை, கொடுத்தனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்: “மேலப்பாளையம்” ஹஸன்.
