விழுப்புரம் கடலூர் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த புரட்சி பாரதம் கட்சி மாவட்ட நிர்வாகிகள் புரட்சி பாரதம் கட்சி பொதுச்செயலாளராக ருசேந்திரகுமாரை அறிவித்த கட்சியின் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் விழா விழுப்புரத்தில் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டச் செயலாளர்கள் தெற்கு தமிழரசன், வடக்கு கஜேந்திரன், தென்மேற்கு திருநாவுக்கரசு, தென்கிழக்கு தியாகராஜன் தலைமை தாங்கினர். கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர்கள் வடக்கு கோவிந்தன், கிழக்கு ஏழுமலை, தெற்கு ராஜா அன்பரசு, கடலூர் மாவட்டச்செயலாளர்கள் கிழக்கு சங்கரலிங்கம், வடக்கு விக்கிதுரை, மாநகர் முகேஷ் மூர்த்தி முன்னிலையில் வகித்தனர்.
புரட்சி பாரதம் கட்சியின் பொதுச் செயலாளர் ருசேந்திரகுமார் ஏற்புரையாற்றினார். மாநில இளைஞரணிப் பொதுச்செயலாளர் தர்மன், துணைச்செயலர் கோபிநாத் செய்தித் தொடர்பாளர் பூவை. ஆறுமுகம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புரட்சிப் பாரதம் கட்சியை வலுப்படுத்தும் வகையில் கிராமங்கள் தோறும் புதிய உறுப்பினர் சேர்க்கை 100க்கும் மேற்பட்டோர் பொறுப்பாளர்களைத் தேர்வு செய்தல் கிளைகள் தோறும் கல்வெட்டு பதாகைகள் அமைப்பது.
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பட்டியலின மக்கள் பொருளாதார ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக பயனாளிகளுக்கு விடுவிக்க வேண்டும். தமிழகத்தை மது இல்லாத வகையில் உருவாக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் மாவட்ட அளவில் நிறைவேற்றப்பட்டன.
ஒருங்கிணைப்பாளர் தீபன் வரவேற்றார் விழுப்புரம் தெற்கு மாவட்ட அமைப்பாளர் ஜிபிஎஸ் செல்வராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் ஜிபிஎஸ் சர்வின்ராஜ் இறுதியாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிலம்பரசன் ஆகியோர் உள்ளனர்.
