நவராத்திரியின் இரண்டாம் நாளில் நவ துர்கைகளில் பிரம்மச்சாரிணியை தேவியை தான் வழிபடுகின்றோம். பிரம்மச்சாரிணி தேவிக்கு சிவப்பு நிற ஆடை அணிவிக்கப்பட்டு அவளுக்காக அர்ப்பணிக்கப்படும் பூஜைகளில் பக்தர்கள் ஈடுபடுவார்கள். பிரம்மசாரணி என்ற சொல்லுக்கு பிரம்மச்சாரி என்ற வார்த்தையில் இருந்து வந்தது அதாவது தவம் செய்தல் என்று பொருள் .இன்று இந்த பிரம்மசாரிணி அம்மனை வழிபடுவதால் துணிவு, பொறுமை, ஒழுக்கம், தீவிர கவனம் இவற்றை அடையலாம்.
இன்று மூன்றாம் பிறை பார்த்துவிட்டு பிரம்மசாரிணி அம்மனை மனசில் நினைத்து வேண்டினால் மனதில் உள்ள குழப்பங்கள் தீரும்.இந் நாளில் அனுஷ்டிக்கும் விரதமானது மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதி தேவதையாக விளங்குகின்ற சக்தியை போற்றும் விரதமாக இந்த நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறதுஇன்றைய மங்களப் பொருள் -ஜவ்வாது, இசை -புல்லாங்குழல், தியானம் – காமாட்சி
விளையாட்டு பொருட்கள்- குன்றிமணி பூக்கள் முல்லை பூ மாலை கோலம் கோதுமையின் மாவு கோலம்
நைவேத்தியம் -வறுவல் பழங்கள் மாம்பழம் புளியோதரை ராகங்கள் _கல்யாணி ராகம், இன்றைய நாள் பூஜை மணமகிழ்ச்சியை உண்டாக்கும்
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
