நீலகிரி மாவட்டம் முழுவதும் முழு கடை அடைப்பினால் வெரிச்சோடி காணப்பட்ட சாலைகள் நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 24 மணி நேரம் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதால் நீலகிரி முழுவதும் இருக்கும் உணவகங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைக்காக பயன்படுத்தும் கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன இதனால் நீலகிரியில் வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரும் மிகுந்த வருத்தத்திற்கு ஆளாகினர் அது மட்டும் இன்றி முழு கடையடைப்பினால் சுற்றுலா பயணிகள் எங்கும் செல்வதற்கும் வழி இல்லாமல் தவித்தனர். இந்த கடையடைப்பினால் அன்றாட வாழ்க்கைக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்ட செய்தியாளர் அருள்தாஸ்
