தமிழக விடியல் TV
கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் மீனவர்கள் மோதல்: 2 பேர் படுகாயம் !
கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடலில் பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற முட்டம் மற்றும் கடியப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கடியப்பட்டணம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த 2 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். “ஆட்சியர் வழங்கிய அனுமதி படி மீன்பிடித்த எங்களை தாக்கிய மீனவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரி, பாதிக்கப்பட்ட மீனவர்கள் நாகர்கோவிலில் மீன்வளத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால்…
குற்றால அருவிகளில் குளிக்க இரண்டாவது நாளாக தடை விதிப்பு !
தென்காசி ஆகஸ்ட் 16 தென்காசி மாவட்டம் ஏழைகளின் ஸ்பா என்று அழைக்கப்படும் அருவிகள் மிகுந்த பகுதியாகும் இங்கு பிரதான அருவி பழைய குற்றால அருவி புலியருவி ஐந்தருவி செண்பகாதேவி அருவி பழத்தோட்ட அருவி சிற்றருவி ஆகிய அருவிகள் இங்கு உள்ளன. இந்நிலையில் தென்காசி மாவட்டம் தென்காசி மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் மழையின் காரணமாகவும் குற்றாலம் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது…
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சுதந்திர தின சிறப்பு வழிபாடு :
ஆக் 16, கன்னியாகுமரி சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்ற கழக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு.ரெ.மகேஷ் அவர்கள் கலந்து கொண்டு மக்களை வாழ்த்தினார். உடன் இணை ஆணையர் திருமதி. ஜான்ஸிராணி, ஒன்றிய செயலாளர் திரு. பாபு, பேரூராட்சி தலைவர் திருமதி. னுஷியா தேவி, பேரூர் செயலாளர் திரு.சுந்தர், கோவில் நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள்…
- 1
- 2
