திருநெல்வேலி, நவ : 5:- தமிழ் இலக்கிய வரலாற்றை முதன் முதலில் எழுதிய தமிழ் அறிஞரும், சைவ சித்தாந்த வல்லுநரும், சிறந்த வழக்கறிஞரும், தமிழ்ப் பேராசிரியரும், பன்மொழிப் புலவருமான கா.சு.பிள்ளை என்றழைக்கப்படும் காந்திமதிநாத சுப்பிரமணிய பிள்ளையின், 136 -வது பிறந்த நாள், இன்று [நவ.5] தமிழ்ச்சான்றோர்களால் கொண்டாடப்படுகிறது. இந்நாளையொட்டி நெல்லை மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள கா.சு.பிள்ளையின், நினைவுத்தூணுக்கும் [ஸ்தூபிக்கும்], திருவுருவப்படத்திற்கும்நெல்லை மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், மேலப்பாளையம் மண்டல தலைவி கதீஜா இக்லாம் பாசிலா, கா.சு.பிள்ளையின் பேரன் சுப்பிரமணியன், பேத்தி அழகம்மாள், கா.சு.பிள்ளை இலக்கிய வட்டம் நிர்வாகிகள் நீலகண்டன், தங்கவேல், சம்பந்த மூர்த்தி, கிருஷ்ண மூர்த்தி, மீனாட்சி சுந்தரம், தாழையூத்து சங்கர்நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் “கவிஞர்”.கோ.கணபதி சுப்பிரமணியன், கலை பதிப்பகம் பதிப்பாசிரியர் கவிஞர் “பாப்பாக்குடி” இரா. செல்வமணி மற்றும் தமிழ்ச்சான்றோர்கள் உட்பட பலரும், “மலர்மாலை” அணிவித்தும், “மலர்” தூவியும் “மரியாதை” செலுத்தினர்.
நெல்லை மாவட்ட செய்தியாளர் மேலப்பாளையம் : ஹஸன்