Headlines

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80-வது வார்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80-வது வார்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், 80-வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொதுமக்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா மேள தாளங்கள் முழங்க,பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

​ இந்நிகழ்வில், கோவை மாநகராட்சி பொது சுகாதாரக் குழுத் தலைவரும், 80-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான பெ.மாரிசெல்வன் அவர்கள் பொதுமக்களுக்குப் பொங்கல் பரிசுப் பொருட்களான பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரொக்கப் பணம் 3000 ரூபாய் ஆகியவற்றை வழங்கினார்.

​இந்தத் திட்டத்தின் மூலம் வார்டில் உள்ள அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களும் பயன்பெறும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் பொங்கல் பரிசினைப் பெற்றுச் சென்றனர்.

​இந்நிகழ்வில் மாநில தீர்மானம் குழு இணை செயலாளர் பா.நாச்சிமுத்து, பகுதி பொறுப்பாளர் என்.ஜே.முருகேசன், வார்டு செயலாளர் நா.தங்கவேலன், மற்றும் வார்டு கழக நிர்வாகிகள், நியாய விலைக் கடை ஊழியர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்ட செய்தியாளர்: சம்பத்குமார்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *