நாகர்கோவில் :
21 நபர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு நேற்றைய தினம் குமரி மாவட்டம் கோட்டார் தைக்கா பள்ளி ஜமாஅத் கொடியேற்ற விழாவின் இரண்டாம் நாளில், பொதுமக்கள் மற்றும் மூன்று நிர்வாகம் சார்ந்தவர்களுக்கும், நிர்வாக சொத்துக்களை சூறை ஆடுவதாக குற்றம்சாட்டப்படும் ஷேக் இமாம், செய்யது அஹமது முஸ்தபா என்பவர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு இடையே சிறிய சச்சரவு ஏற்பட்டது.
பொதுமக்கள், அந்த நபர்கள் மற்றும் குடும்பத்தினர் பொது சொத்துகளை சூறையாடியதை கண்டித்து எதிர்ப்பு கோஷம் எழுப்பிய நிலையில், காவல் துறை தலையிட்டு சுமூகமாக பிரச்சனை சரி செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று ஷேக் இமாம் மற்றும் செய்யது அஹமது முஸ்தபா, பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் 21 பேர்மீது வழக்கு ஒன்றை கோட்டார் காவல் நிலையத்தில் பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள், ஷேக் இமாம், செய்யது அஹமது முஸ்தபா மற்றும் அவரது குடும்பத்தினர் முத்தவல்லியாக இருந்து நிர்வாக பொது சொத்துகளை விற்பனை செய்து முறைகேடு செய்ததாக குற்றஞ்சாட்டி அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பி வெளியேறச் செய்திருந்தனர்.
இதனால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியில், ஷேக் இமாம் மற்றும் செய்யது அஹமது முஸ்தபா காவல் நிலையத்தில் பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் ஒன்றிணைந்து மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது : ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவித்த அப்பாவி பொதுமக்கள் மீது காவல் துறையில் பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும்.
தொடர்ந்து குழப்பம் விளைவிக்கும் ஷேக் இமாம் மற்றும் செய்யது அகமது முஸ்தபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த நிகழ்வில் மாலிக் தினார் பைத்துல்மால் தலைவர் சுகர்ணோ, தைக்கா பள்ளி ஜமாஅத் தலைவர் ஹமீத், செயலாளர் செய்யது அலி, தைக்கா பள்ளி முன்னாள் தலைவர் அஜீம், கமிட்டி உறுப்பினர்கள் ஃபகத், முகம்மது ரஜினி, மாகீன், அமீர், ரபீக் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.
