ஆக் 30, கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியில் உள்ள தியாக சுடர் காமராஜர் பவனில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்வில் நாகர்கோவில் காங்கிரஸ் நவீன்குமார், மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், வட்டார தலைவர் தங்கம், மயிலாடி நகர காங்கிரஸ் தலைவர் நடேசன், மாவட்ட செயல் தலைவர் மகாலிங்கம், மாவட்ட துணை தலைவர் கிங்ஸ்டன், வட்டார பொருளாளர் ஏ. நாகராஜன், வட்டார செயலாளர் ஏசுதாஸ், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட விளையாட்டு பிரிவு தலைவர் அருண், முத்துகுட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி நகர நிருபர் : செலிஸ்
