கன்னியாகுமரி, ஆகஸ்ட் 29 :
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரியில் “தமிழ்க்கனவு” நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ஜெ. பாலசுப்பிரமணியம் தலைமைத்துவமாக கலந்து கொண்டு, மாணவர்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் சமூக பங்களிப்பிற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவாளராக திரு. செந்தில்வேல் கலந்து கொண்டு, தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தின் சிறப்பை மாணவர்களிடம் எடுத்துரைத்தார். நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி எஸ். காளீஸ்வரி அவர்களும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
காலை 10.30 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் மாணவியர்கள், பேராசிரியர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். கவிதை வாசிப்புகள், நாட்டுப்புற நடனம், சிறப்புரைகள் மற்றும் மாணவர் இன்டராக்ஷன் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தமிழ் வளர்ச்சிக்கான மாணவர்களின் உறுதி மற்றும் சமூக விழிப்புணர்வை வலியுறுத்திய இந்த நிகழ்ச்சி, பேரின்பத்தையும் புதிய உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
கேமராமேன் : ஜெனீருடன்
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்
