ஆக் 18, கன்னியாகுமரி
அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகர்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், 23 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், ஓய்வூதியர்களுக்கு பணியில் உள்ள தொழிலாளர்கள் பெறும் அகவிலைப்படி, மருத்துவ காப்பீடு, ஒப்பந்த அடிப்படையிலான ஓய்வூதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்றும், குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கி, வாரிசு வேலை வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அத்துடன், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், ஓய்வூதியர் இல்லங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
இந்த போராட்டத்தில் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு உறுதுணையாக இருந்தனர்.
– குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்
