கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடலில் பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற முட்டம் மற்றும் கடியப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் கடியப்பட்டணம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த 2 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
“ஆட்சியர் வழங்கிய அனுமதி படி மீன்பிடித்த எங்களை தாக்கிய மீனவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரி, பாதிக்கப்பட்ட மீனவர்கள் நாகர்கோவிலில் மீன்வளத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
பாவலர் ரியாஸ்
மாவட்ட நிருபர்.
