Headlines
சதாவதானி செய்குத்தம்பி பாவலருக்கு அரசு, அரசியல் கட்சிகள் சார்பில் மரியாதை

சதாவதானி செய்குத்தம்பி பாவலருக்கு அரசு, அரசியல் கட்சிகள் சார்பில் மரியாதை

தமிழறிஞரும் சுதந்திரப் போராட்டத் தியாகியுமான பாவலரின் பிறந்தநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் அஞ்சலி; பல்வேறு தரப்பினரும் பங்கேற்பு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடியில் அமைந்துள்ள சதாவதானி செய்குத்தம்பி பாவலரின் நினைவு மண்டபத்தில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், குடும்பத்தினர் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர். அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரதாப், இ.ஆ.ப.,…

Read More
நடிகர் முத்துக்காளையின் கல்விப் பயணம்: சோகத்திலும் உயர்கல்வியை நோக்கி புதிய அத்தியாயம்!

நடிகர் முத்துக்காளையின் கல்விப் பயணம்: சோகத்திலும் உயர்கல்வியை நோக்கி புதிய அத்தியாயம்!

நடிகர் முத்துக்காளை தமிழ் நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு மூலமாக B.A., M.A., B.Lit. ஆகிய மூன்று பட்டப் படிப்புகளை ஏற்கெனவே படித்துப் பட்டம் பெற்றிருந்தார். அடிப்படையில் எட்டாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த அவர், அப்போதிருந்த பல்கலைக்கழக விதிகளின்படி நுழைவுத் தேர்வு எழுதி பட்டப் படிப்புகளை முடித்திருந்தார். இருப்பினும், அதற்குமேல் உயர்கல்வி பயில ஆசைப்பட்ட அவருக்கு ஒரு புதிய தடை ஏற்பட்டது. முறைசார் கல்வி மூலம் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் மட்டுமே…

Read More
பழனியில் தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் த.வெ.க அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

பழனியில் தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் த.வெ.க அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் பழனி மலைக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்ய வேண்டும், பழனி சக்கிலியர் மக்களுக்குச் சொந்தமான மடத்தைத் தனிநபருக்குப் பத்திரப்பதிவு செய்ததை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் மற்றும் ஐந்தாண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது….

Read More
மதுவின் பிடியில் தமிழ்ச் சமூகம்: இன்னும் 30 ஆண்டுகளில் DNA அழியும் அபாயம்! – பொது சுகாதார நிபுணர் எச்சரிக்கை!

மதுவின் பிடியில் தமிழ்ச் சமூகம்: இன்னும் 30 ஆண்டுகளில் DNA அழியும் அபாயம்! – பொது சுகாதார நிபுணர் எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மதுப்பழக்கம், தனிநபர் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, ஒரு சமூகத்தின் மரபணுவையே (DNA) மாற்றியமைக்கும் பேரழிவை நோக்கி அழைத்துச் செல்வதாகப் பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமி அவர்கள் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். கடந்த 1971-ஆம் ஆண்டு தமிழகத்தில் மதுவிலக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தில் இரு தலைமுறைகளாக மதுப்பழக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. பொது சுகாதார வல்லுநர்களின் ஆய்வின்படி, தொடர்ந்து…

Read More
ஏஐ மூலம் பெண்களுக்கு அவதூறு: எடப்பாடி மீது சி.வி. சண்முகம் கடும் குற்றச்சாட்டு

ஏஐ மூலம் பெண்களுக்கு அவதூறு: எடப்பாடி மீது சி.வி. சண்முகம் கடும் குற்றச்சாட்டு.

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுகவில் பெண்கள் மீது நடைபெறும் அவதூறு பிரச்சாரங்களை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கும் பெண் நிர்வாகிகளை குறிவைத்து ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். இது கட்சிக்குள் ஆபத்தான கலாச்சாரமாக உருவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த அவதூறு நடவடிக்கைகளை தடுக்க வேண்டிய கட்சித் தலைமையே இதை மறைமுகமாக ஊக்குவிக்கிறது எனவும் சண்முகம் குற்றம் சாட்டினார். பெண்களை அவமதிக்கும்…

Read More
திமுக விரித்த சிகப்பு கம்பளம்… தவெகவுக்கு தாவும் தர்மயுத்தம்?: எடப்பாடியைத் தொடர்ந்து ஸ்டாலினுக்கும் ‘கையெழுத்து’ போடப்போகிறாரா ஓபிஎஸ்?!

திமுக விரித்த சிகப்பு கம்பளம்… தவெகவுக்கு தாவும் தர்மயுத்தம்?: எடப்பாடியைத் தொடர்ந்து ஸ்டாலினுக்கும் ‘கையெழுத்து’ போடப்போகிறாரா ஓபிஎஸ்?!

தமிழக அரசியலில் எப்போதுமே ஆச்சரியங்களுக்கும் திருப்பங்களுக்கும் பஞ்சமிருந்ததில்லை. ஆனால், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் பயணத்தை கவனிப்பவர்களுக்கு, ‘அடுத்து எந்தப் பக்கம் திரும்பப் போகிறார்?’ என்பதே பெரிய புதிராக உருவெடுத்துள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை மோதலில் எடப்பாடி பழனிசாமியால் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டு, கட்சியிலிருந்தும் முறைப்படி வெளியேற்றப்பட்டார் ஓபிஎஸ். வீழ்ந்துவிட்டதாகக் கருதப்பட்ட அந்தத் தருணத்தில், ஆளும் திமுக தரப்பு அவருக்குக் கைகொடுத்தது. “தாய் கழகத்துக்குத் திரும்பி விட்டேன்” என்று உருகி, அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முன்னிலையில் இணைந்த ஓபிஎஸுக்கு,…

Read More
பாஜகவின் நிழல் ஆட்சியா தவெக ஆட்சி? - அமைதியின் பின்னணியில் இருக்கும் அரசியல் கணக்குகள்!

பாஜகவின் நிழல் ஆட்சியா தவெக ஆட்சி? – அமைதியின் பின்னணியில் இருக்கும் அரசியல் கணக்குகள்!

தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய புயலை ஏற்படுத்தி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள தவெக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இன்று வரை பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. “புதிய மாற்றம் வரும், தொழில்துறை செழிக்கும்” என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவெக அரசு தனது செயல்பாடுகளில் வேகம் காட்டாமல் கோட்டை விட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கும் மிக முக்கியமானது புதிய தொழில் முதலீடுகள். ஆனால், தவெக ஆட்சி…

Read More
பழனி கோவில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் மேலும் ஒருவர் கைது!

பழனி கோவில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் மேலும் ஒருவர் கைது!

பழனி, ஜூலை 29: பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை, வெறும் ரூ.2 கோடிக்கு போலி ஆவணங்கள் மூலமாக மோசடியாகப் பத்திரம் பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள கோவில் நில மோசடி குறித்து சி.பி.சி.ஐ.டி. (CBCID) போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நில ஆவண மோசடி வழக்கில்…

Read More
திண்டுக்கல் அருகே சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது- ரூ.1,10,000 பணம் பறிமுதல்

திண்டுக்கல் அருகே சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது- ரூ.1,10,000 பணம் பறிமுதல்.

திண்டுக்கல் அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எஸ்.பி. தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது சீலப்பாடி, K.R.நகர் அருகே பூங்கோடை பகுதியில் சங்கர் என்பவரின் வீட்டில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய சங்கர்(43), பாண்டியராஜன்(50), கார்த்திக்(34), மதுரைவீரன்(36), சரவணகுமார்(27), முரளி(35), லிங்கராஜ்(37), சேசுராஜ்(50) ஆகிய 8 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1,10,000 பணத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேற்படி சம்பவம்…

Read More
பழனி கூனகாளி அம்மன் கோவில் திருவிழா: 200-க்கும் மேற்பட்ட முளைப்பாரிகளுடன் கோலாகல ஊர்வலம்!

பழனி அருள்மிகு கூனக்காளியம்மன் கோவில் திருவிழா: 200-க்கும் மேற்பட்ட முளைப்பாரிகளுடன் கோலாகல ஊர்வலம்!

பழனி : ஜூலை 01 : திண்டுக்கல் மாவட்டம் பழனி கச்சேரி புதுதெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு கூனக்காளியம்மன் கோவில் திருவிழா தற்பொழுது வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவின் இரண்டாம் நாள் விழாவின் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படும் முளைப்பாரி ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கோவில் வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை, பழனி சித்தநாதன் & சன்ஸ் உரிமையாளர் திரு. பழனிவேல் அவர்கள் முறைப்படி தொடங்கி வைத்தார். இவ்விழாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட…

Read More