பழம்பெரும் கவிஞர் பூவை செங்குட்டுவன் சென்னையில் காலமானார் !
அவர் எழுதிய புத்தகம் கடந்த வாரம் வெளியான நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மறைந்தார். பூவை செங்குட்டுவன் இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் அஞ்சலி.! தமிழ் இலக்கிய மற்றும் திரையுலகினரால் பெரிதும் மதிக்கப்படும் கவிஞரும் பாடலாசிரியருமான பூவை செங்குட்டுவன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் செப்டம்பர் 5 மாலை காலமானார். அவருக்கு வயது 90. அவரது இறுதி சடங்குகள் சனிக்கிழமை அன்று நடைபெற்ற நிலையில், பூவை செங்குட்டுவனின் இல்லத்திற்கு சென்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,…
