ஆம்பூர் அருகே வங்கியில் தந்தை வாங்கிய கடனுக்காக வீட்டை ஜப்தி செய்ய வந்த வங்கி அதிகாரிகள், காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் மகள் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.
வாணியம்பாடி,நவ.7- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கைலாசகிரி முருகன் கோயில் மலையடிவார பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி பாலாஜி. இவருக்கு இரண்டு மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். முதல் மனைவிக்கு கவிதா என்ற மகளும், இரண்டாவது மனைவிக்கு நித்யா, சுகன்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் பாலாஜி கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு முன்பு ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் வீடு கட்ட 33 லட்சம் கடன் வாங்கி…