Headlines
வாணியம்பாடி

வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

வாணியம்பாடி,செப்.25- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இசுலாமிய கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுதல், முதலாம் ஆண்டு நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கான புத்தொளிப் பயிற்சி மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட 7 நாள் சிறப்பு முகாமில் கலந்து கொண்ட 150 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் தி.அப்சர்பாஷா தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். கல்லூரி துணை முதல்வர் முனைவர்…

Read More
சாலை பணிகளை ஆய்வு மேற்கொண்ட

சாலை பணிகளை ஆய்வு மேற்கொண்ட நகரமன்ற தலைவர் ஏஜாஸ் அகமத்!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட 1 வது பகுதிஜட்ஜ்மனை மெயின் ரோட்டில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் சிமெண்ட் சாலை மற்றும் கால்வாய் அமைக்கும் பணிகளை நகரமன்ற தலைவர் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது 1 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் டி.ரஜியாவின் கணவர் முனாப், 2 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் ஷாஹெதாவின் கணவர் பாரூக் ஆகியோர் உடன் இருந்தனர்.

Read More

மயான பூமி பகுதியில் வளர்ந்துள்ள மரங்கள், செடிகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றம்

பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் – 03, 24வது வார்டில் அமைந்துள்ள புழல் மயான பூமி பகுதியில் சுத்தம் செய்யும் பணிகள் இன்று காலை நடைபெற்றது. புழல் மயான பூமி பகுதியில் வளர்ந்துள்ள மரங்கள், செடிகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்‌. இந்நிகழ்வில் 24 வது வார்டு மாமன்ற உறுப்பினர் புழல் சேட்டு நேரில் சென்று ஆய்வு செய்து மாநகராட்சி ஊழியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

Read More
உடுமலை நாராயண கவிராயர் 125-வது பிறந்தநாள் விழா.!

உடுமலை நாராயண கவிராயர் 125-வது பிறந்தநாள் விழா.!

தமிழக அரசு சார்பில் மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.! திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயண கவிராயரின் 125 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று குட்டைதிடல் பகுதியில் உடுமலை நாராயண கவிராயரின் மணிமண்டபத்தில் அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் கலந்து கொண்டு திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில்பொள்ளாச்சி எம்.பி.ஈஸ்வரசாமி , மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன்…

Read More
கள்ளக்குறிச்சி அருகே வேன் மரத்தில் மோதியதால் விபத்து.!

கள்ளக்குறிச்சி அருகே வேன் மரத்தில் மோதியதால் விபத்து.!

6 பேர் சம்பவ இடத்தில் பலி.! கள்ளக்குறிச்சி மாவட்டம், சென்னை – திருச்சி நெடுஞ்சாலை சித்தனுர் கிராமத்தில் வந்து கொண்டிருந்த போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியதில் வேனில் சென்ற 13 பேரில் சம்பவ இடத்திலேயே டிரைவர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த திருநாவலூர் காவல்துறையினர் விபத்து நடந்த இடத்தில்…

Read More