Headlines
ரங்கப்பனூர் வட்டம் மல்லாபுரம் ஊராட்சியில் பணிபுரியும் அனைவருக்கும் தீபாவளி பரிசு தொகுப்பினை ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்.

ரங்கப்பனூர் வட்டம் மல்லாபுரம் ஊராட்சியில் பணிபுரியும் அனைவருக்கும் தீபாவளி பரிசு தொகுப்பினை ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரங்கப்பனூர் மல்லாபுரம் ஊராட்சியில் ரிஷிவந்தியம் சட்ட மன்ற உறுப்பினர் வசந்தம்கார்த்திகேயன் ஆலோசனைப்படி ரங்கப்பனூர் மல்லாபுரம் ஊராட்சியில் பணிபுரியும் அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜ் தீபாவளி தொகுப்பு பரிசினை வழகினார் இதில் ஒன்றிய கவுன்சிலர் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலர் பத்திரிக்கை நண்பர்கள் கணினி இயக்குனர் அரசு ஒப்பந்ததாரர் மற்றும் பணித்தள பொறுப்பாளர்கள் துப்புரவு பணியாளர்கள் தூய்மை காவலர் டேங்க் ஆப்ரேட்டர்கள் அனைவருக்கும் தீபாவளி தொகுப்பு பரிசினை பட்டாசு பாக்ஸ்…

Read More
நடப்புப் பிசானப்பருவ சாகுபடிக்காக, திருநெல்வேலி மாவட்டத்தில், பாபனாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய, 3 அணைகளில் இருந்து, ஒரே நேரத்தில் தண்ணீர் திறப்பு! தமிழக சபாநாயகர் அப்பாவு, திறந்து வைத்தார்!

நடப்புப் பிசானப்பருவ சாகுபடிக்காக, திருநெல்வேலி மாவட்டத்தில், பாபனாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய, 3 அணைகளில் இருந்து, ஒரே நேரத்தில் தண்ணீர் திறப்பு! தமிழக சபாநாயகர் அப்பாவு, திறந்து வைத்தார்!

திருநெல்வேலி, அக்.28:-திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபனாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய 3 அணைகளில் இருந்தும், இன்று [அக்.28] காலையில் ஒரேநேரத்தில், நடப்புப் பிசானப்பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தமிழக சட்டமன்ற பேரவைத்தலைவர் [சபாநாயகர்] மு.அப்பாவு, சிறப்புப் பூஜைகளுக்குப் பின்னர், இந்த அணைகளில் இருந்து முறைப்படி தண்ணீரை, திறந்து வைத்தார். இந்த அணைகளின் கீழுள்ள, வடக்குக் கோடை மேல் அழகியான், தெற்கு கோடை மேல் அழகியான், நதியுண்ணி, கன்னடியன், திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை ஆகிய 7…

Read More
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின், 31-வது பட்டமளிப்பு விழா! தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாக பங்கேற்று, பட்டங்களை வழங்கினார்! தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் புறக்கணிப்பு!

திருநெல்வேலி – அக்.26 : திருநெல்வேலி “மனோன்மணியம்” சுந்தரனார் பல்கலைக்கழகத்தின், 3-வது பட்டமளிப்பு விழா, திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் உள்ள, பல்கலைகழக வளாகத்தில் அமைந்துள்ள, வ.உ.சிதம்பரனார் கலையரங்கில், இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இந்த விழாவில், பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என். ரவி, நேரடியாக பங்கேற்று, “தங்கப்பதக்கம்” பெற்ற 14 ஆண்கள், 97 பெண்கள் என, 111 பேர்களுக்கும், “முனைவர்” பட்டம் பெற்ற 83 ஆண்கள், 377 பெண்கள் என,460 பேர்களுக்குமாக, மொத்தம் 571 பேர்களுக்கு,…

Read More
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த, திருநெல்வேலி வீரவநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் சுப்பையா !

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த, திருநெல்வேலி வீரவநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் சுப்பையா !

சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்த, திருநெல்வேலி வீரவநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் சுப்பையாவின் உடல் உறுப்புகள், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இன்று [அக்.26] தானமாகப் பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவமனை தலைவர் டாக்டர்.C.ரேவதிபாலன் தலைமையில், சுப்பையாவின் உடலுக்கு, அரசு மரியாதை செலுத்தப்பட்டது. திருநெல்வேலி செய்தியாளர் : மேலப்பாளையம் ஹஸன்.

Read More
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 03 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,05,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 03 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,05,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை காதலித்து ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முசுவனூத்து பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி(23) என்பவரை நிலக்கோட்டை காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்…

Read More
தமிழக அரசின், "விலையில்லா மிதிவண்டிகள்" வழங்கும் நிகழ்ச்சி, திருநெல்வேலியை அடுத்துள்ள, மேலப்பாளையம் "முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில்" நடைபெற்றது.

தமிழக அரசின், “விலையில்லா மிதிவண்டிகள்” வழங்கும் நிகழ்ச்சி, திருநெல்வேலியை அடுத்துள்ள, மேலப்பாளையம் “முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில்” நடைபெற்றது.

தமிழக அரசின், “விலையில்லா மிதிவண்டிகள்” வழங்கும் நிகழ்ச்சி, திருநெல்வேலியை அடுத்துள்ள, மேலப்பாளையம் “முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில்” வைத்து, வியாழக்கிழமை [அக்.24] மாலையில், நடைபெற்றது. முஸ்லிம் கல்வி கமிட்டி செயலாளர் மீரான் முகைதீன் தலைமை வகித்தார். முஸ்லிம் கல்வி கமிட்டி பொருளாளர் அப்துல் மஜீத், அனைவரையும் வரவேற்று பேசினார்.முஸ்லிம் கல்வி கமிட்டி தலைவர் அப்துல் காதர், முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மீரா முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். “சிறப்பு” அழைப்பாளராக, பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார் கலெக்டர் எம்.எஸ்.பிரசாந்த்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார் கலெக்டர் எம்.எஸ்.பிரசாந்த்.

அக். 25, கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையின் முழு கொள்ளளவான 46 அடியை எட்டியுள்ள நிலையில் பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார் கலெக்டர் எம்.எஸ். பிரசாந்த் உடன் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் வெள்ளாறு வடி நிலக்கோட்ட பொறியாளர் அருணகிரி, உதவி செயற்பொறியாளர் மோகன், உதவி பொறியாளர்கள் விஜயகுமார், பிரபு, மாதவன், பிரசாத், மற்றும் பாசன சங்கத் தலைவர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர். புதிய…

Read More
உளுந்தூர்பேட்டை பெஸ்கி மேல்நிலைப் பள்ளியில் 248 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

உளுந்தூர்பேட்டை பெஸ்கி மேல்நிலைப் பள்ளியில் 248 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பெஸ்கி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 248 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆ.ஜெ.மணிக்கண்ணன் அவர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கி சிறப்புரையாற்றினார் இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை செல்வராணி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் மற்றும் நகர மன்ற உறுப்பினர் செல்வம் டேனியல்ராஜ், மற்றும் நகர மன்ற…

Read More
உடுமலையில் ஆடிட்டர் வீட்டில் திருடிய மூன்று பேர் கைது 15 பவுன் நகை பறிமுதல்.

உடுமலையில் ஆடிட்டர் வீட்டில் திருடிய மூன்று பேர் கைது 15 பவுன் நகை பறிமுதல்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஏரிப் பாளையம் சேகர்நகர்பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (49).இவர் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி இன்று வீட்டை பூட்டிக் கொண்டு தண்டபாணி மற்றும் அவரது மனைவியும் வெளியே சென்று விட்டனர்.இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகையை திருடி சென்று விட்டனர். பின்னர் மதியம் தண்டபாணி வீட்டுக்கு திரும்பி வந்த போது கதவு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று…

Read More
பழனி முல்லை நகரில் ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேர் தற்கொலை- தந்தை இளங்குமரன், தாய் ரேணுகாதேவி, மகள் தேன்மலர் மூவரும் உயிரிழந்தனர்.

பழனி முல்லை நகரில் ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேர் தற்கொலை- தந்தை இளங்குமரன், தாய் ரேணுகாதேவி, மகள் தேன்மலர் மூவரும் உயிரிழந்தனர்.

அக்டோபர் : 23-திண்டுக்கல் மாவட்டம் பழனி முல்லை நகரில் வசித்து வருபவர் இளங்குமரன். பழனியில் எலக்ட்ரிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ரேணுகாதேவி மேல்கரைபட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியை ஆக பணியாற்றி வருகிறார். இவரது மகள் தேன்மலர் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மகன் வினித் கோயம்புத்தூரில் உள்ள சாப்ட்வேர் இஞ்சினியராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் வீட்டிலிருந்த இளங்குமரன், அவரது மனைவி ரேணுகாதேவி மற்றும் மகள் தேன் மலர் ஆகிய மூவரும் நீண்ட…

Read More