தமிழ்நாடு
பழனி மலைக்கோவிலில் தமிழக சட்டமன்ற உறுதிமொழி ஏற்புக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று தமிழக சட்டமன்ற உறுதிமொழி ஏற்புக்குழுவினர்ஜவருகைதந்தனர். சட்டமன்ற உறுதிமொழி ஏற்புக்குழு தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் பழனி மலைக் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பழனி மலைக்கோவில் அன்னதான கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சமையல் கூடத்தில் மேற்கொள்ளப்படும் சமையல் பணிகள் மற்றும் சமையல் கூடத்தின் சுகாதாரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் அன்னதான கூடத்தில் உணவருந்திய பக்தர்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து உறுதிமொழி ஏற்புக்குழுவினர் மாவட்ட…
உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலையில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது.!
சுற்றுலாவின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் விழிப்புணர்வு அளிக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் உலக சுற்றுலா தினமான செப்டம்பர் 27 நாளான இன்று உலக சுற்றுலா தினவிழா தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையின் சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உலக சுற்றுலா தின விழாவானது திருப்பூர் மாவட்டத்தில் திருமூர்த்தி மலையில் நடைபெற்றது. உலக சுற்றுலா தின விழா நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக, உடுமலை அரசு கலைக் கல்லூரியில் சுற்றுலா மற்றும் அமைதி என்ற கருப்பொருளில் மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார்…
காரத்தொழுவுஅரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்முதலமைச்சர் கோப்பைக்கான ஹேண்ட் பால் போட்டியில் முதலிடம்.!
திருப்பூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான ஹேண்ட் பால் (கைப்பந்து) போட்டியானது உடுமலை எஸ்கேபி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் பள்ளிகளுக்கான மாணவர்கள் பிரிவில் அரசு மேல்நிலைப்பள்ளி காரத்தொழுவு மாணவர்கள் முதலிடம் பெற்றனர். மேலும் மாநில அளவிலான போட்டிக்கு மாணவர்கள் தேர்வாயினர். பயிற்சி கொடுத்த ஆசிரிய பெருமக்கள் விஜயன் மற்றும் கார்த்திகேயன் அவர்களுக்கும் வெற்றி பெற்ற பள்ளியின் மாணவர்களுக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் மற்றும் ஆசிரிய பெருமக்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு…
உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் 2 நாள் ஆய்வு
உடுமலை ஸ்ரீ ஜி.வி. ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் தேசிய தர நிர்ணய குழுவினர் (நாக்) 2 நாள் ஆய்வு நிறைவடைந்தது.உடுமலை ஸ்ரீ ஜி. வி. ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி 1952 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது 20 துறைகளுடன் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.கல்லூரியில் உடுமலை மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். இதுதவிர பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களைச் சார்ந்த மாணவியரும் பயில்கின்றனர். ஐந்தாவது…
உடுமலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
உடுமலை வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சுருள் சங்கம், உடுமலை அரசு மருத்துவமனை, காவல்துறை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து உடுமலை நகரில் தூய்மை இந்தியா, போதை ஒழிப்பு, சாலைப் பாதுகாப்பு மற்றும் எச்ஐவி எய்ட்ஸ் விழிப்புணர்வு ஆகியவற்றை மையமாக கொண்டு பேரணி நடத்தினர். விழிப்புணர்வு பேரணியானது உடுமலை குட்டைத் திடலில் துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மத்திய பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது. இப்பேரணியை…
தமிழக சட்டமன்ற உறுதிமொழி ஏற்புக்குழுவினர் பழனி கோயிலில் ஆய்வு.
தமிழக சட்டமன்ற உறுதிமொழி ஏற்புக்குழுவினர் பழனி கோயிலில் ஆய்வு. உறுதிமொழி ஏற்புக்குழுத் தலைவரான சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையிலான அரவிந்த் ரமேஷ், சீனிவாசன், நல்லதம்பி, பூமிநாதன், மோகன், எம்.சக்கரபாணி, மணி, ஜெயக்குமார், அருள் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மலைக்கோவில் அன்னதான சமையல் கூடத்தை ஆய்வு செய்தனர். உடன் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி மற்றும் திருக்கோயில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
பொருளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயத்திற்கு பயனுள்ள பூச்சி மருந்து அடிக்கும் ட்ரோன் வாங்கப்பட்து.
தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பொருளூர் ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஓர் மகிழ்ச்சியான செய்திதமிழக அரசின் கூட்டுறவுத் துறையின் மூலம் A1412 பொருளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயத்திற்க்கு பயனுள்ள பூச்சி மருந்து அடிக்கும் ட்ரோன் வாங்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது தேவைப்படும் விவசாயிகள் பொருளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை தொடர்பு கொள்ளவும்8220057235 |9843381977 |9360802308
சிறுமியை ஜீப் ஓட்ட வைத்து ரீல்ஸ் வெளியிட்ட இந்து முன்னணி பிரமுகர் மீது வலுக்கும் கண்டனம்.!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து இவர் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னிடம் உள்ள ஜீப் குறித்து பல்வேறு பதிவுகளை வீடியோவாக பதிவிட்டு வருகிறார் இந்நிலையில் இரண்டு சிறுமிகளை வைத்து இவர் ஜீப் ஓட்ட வைத்து அதில் பயணிக்க வைத்தும் ஆபத்தான முறையில் ஜீப் இயக்க வைத்து அதனை வீடியோ பதிவு செய்து ரீல்ஸ் ஆக இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஏராளமானோர் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ள…
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதிகளில் பல லட்ச ரூபாயில் கட்டப்பட்ட கட்டிடங்களை இன்று சுற்றுலா துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் ஹெல்த் கேம் பகுதியில் உள்ள 38.90. இலட்சம் மதீப்பீட்டில் பொது பணி துறை மூலம் 6.30 சதுர பரப்பில் கட்டப்பட்டு வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டுமானதனை சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமசந்திரன் ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி அலுவலகபயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியார் லட்சுமி பவ்யா தண்ணீரு இ ஆ ப முன்னிலையில் வகித்தார் நிகழ்ச்சியில் பொது பணி துறை கண்கானிப்பு பொறியாளர் மற்றும்…
ஸ்பா என்கிற பெயரில் பாலியல் தொழில் செய்தவர் கைது.!
இரண்டு பெண்கள் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஸ்பா என்கிற பெயரில் பாலியல் தொழில் செய்து வருவதாகரகசிய தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவிற்கு கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் கடந்த இரண்டு தினங்களாக திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதி முழுவதும் உள்ள ஸ்பாக்களை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் திருப்பத்தூர் வாணியம்பாடி சாலை அருகே தூய…
