திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கு எதிராக, தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் சென்னை ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.
இதனையடுத்து தீபம் ஏற்றலாம் என்பது உறுதியாகி உள்ளது
திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கை அரசு அரசியல் நோக்கில் அணுகியதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட அரசே காரணம் எனவும் நீதிபதிகள் பரபரப்பு கருத்தையும் தெரிவித்துள்ளனர்.
மேலும், மலையில் தீபம் ஏற்றலாம் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
