Headlines

திருநெல்வேலியில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலியில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி,நவ.25:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் குறித்தும், வாக்காளர்களால் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள படிவங்களை, செயலியில் பதிவேற்றம் செய்வது குறித்தும், நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளுடன், “மாவட்ட ஆட்சித்தலைவர்” டாக்டர் இரா. சுகுமார், இன்று {நவம்பர்.25} காலையில் “ஆலோசனை” நடத்தினார்.

அப்போது பேசிய அவர், “படிவங்களை பூர்த்தி செய்வது குறித்த, சந்தேகங்கள் இருப்பின், அந்தந்த வாக்குச்சாவடிகளின், நிலை அலுவலர்களை அணுகி, சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம். இம்மாவட்டத்தில் மொத்தமுள்ள, ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கும், தொலைபேசி “உதவி எண்கள்” அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தொடர்பு கொண்டும், உதவி பெறலாம். வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள அனைத்து இடங்களிலும், உதவி மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி முகவர்கள், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்னர், தினசரி 50 படிவங்களையும், வெளியிட்டதற்கு பின்னர், 10 படிவஙகளையும், வாக்குச்சாவடிகளின் நிலை அலுவலர்களிடம் வழங்கலாம். ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவர்களும், கணக்கீட்டு படிவங்கள் தன்னால் சரி பார்க்கப்பட்டது!

அவை சரியானவை! எனவும், இப்பணிகளால் மனநிறைவு அடைந்துள்ளதாகவும் கையெழுத்திட்டுள்ள “உறுதி மொழி” படிவங்களை, இணைத்து அளிக்க வேண்டும்! அனைவரும் இப்பணிகளில், மாவட்ட நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும்!- என்று, குறிப்பிட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மு. துரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, தேர்தல் தாசில்தார் முருகன் ஆகியோர் உட்பட, அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *