அதை முன்னிட்டு கேரளா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு , வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்தும், நெகிழிப்பைகள் பயன்பாட்டால் வனவிலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நெகிழியை தவிர்ப்போம்.! புவியை காப்போம்.! என்ற தலைப்பில் அமராவதி வனச்சரக அலுவலர் புகழேந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் நெகிழிப்பைக்கு மாற்றாக மஞ்சப்பை வழங்கப்பட்டது.. இதில் உடுமலை வனச்சரக அலுவலர் வாசு, வனவர்கள், வன காவலர்கள் மற்றும் வனப் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் , பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.
