திருநெல்வேலி, செப். 28:- “உலக ஆறுகள் தினம்” ஆண்டுதோறும், செப்டம்பர் மாதம் நான்காவது வாரத்தில், கொண்டாடப்படுகிறது.
ஆறுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டு வதையும், அவற்றின் தூய்மை மற்றும் பாதுகாப்பு ஆகியன குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும், இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதன் அடிப்படையில், திருநெல்வேலியில் உள்ள, தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கத்தினர், தங்களுடைய சார்பு அணியான, “நம் தாமிரபரணி” சார்பாக, இன்று (செப்டம்பர். 28) திருநெல்வேலி சந்திப்பு மணிமூர்த்திஸ்வரம், “தாமிரபரணி” படித்துறையில், புங்கை, பூவரசு, வேம்பு உள்ளிட்ட, பலன் தரும் 14 மரக்கன்றுகளை நட்டு,மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அத்துடன், “ஆறுகளின் பாதுகாப்பு மற்றும் பயன்கள்” பற்றி, பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஓவியம் மற்றும் கவிதை போட்டிகளையும் நடத்தி, பரிசுகளும் வழங்கினர்.
இந்த நிகழ்விற்கு, தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கத்தின், மாவட்ட துணை தலைவர் இரா.சீதாராமன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் சங்கர நாராயணன், அனைவரையும் வரவேற்று பேசினார்.
அமைப்பு செயலாளர் தேவிகா, நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து, சிறப்புரையும், நிகழ்த்தினார். மகளிர் அணி பொறுப்பாளர் பொன்னம்மாள் தலைமையிலான குழுவினர், “தாமிரபரணி” சிறப்புகள் குறித்து, விழிப்புணர்வு பாடல்களை பாடி, வந்திருந்தோரை மகிழ்வித்தனர்.
சிறப்புஅழைப்பாளராக,சேரன்மகாதேவி சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் க. செல்வன் பங்கேற்றிருந்தார்.
திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க பொது செயலாளர் “கவிஞர்” கோ.கணபதி சுப்பிரமணியன் கலந்து கொண்டு, “தாமிரபரணி” நதியினை, பாதுகாக்க வேண்டியதின் அவசியம் குறித்தும், பொதுமக்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்தும், உரை நிகழ்த்தி, “விழிப்புணர்வு” ஏற்படுத்தினார்.
தாமிரபரணி பாதுகாப்பு இயக்க பொறுப்பாளர் வித்யா சேகர், நம் தாமிரபரணி சிகாமணி, ஐந்திணை ஹரி பிரதாபன் ஆகியோர், மரக்கன்றுகளுக்குரிய “பாதுகாப்பு கூண்டுகள்” அமைத்து கொடுத்தனர்.
“தாமிரபரணி” நதியினை, பாதுகாப்பது பற்றிய, “உறுதிமொழி” அனைவராலும் ஏற்கப்பட்டது.
நிறைவாக, தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கபொருளாளர் செ.வேங்கடாசலம், அனைவருக்கும் “நன்றி” கூறினார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்
