செப் 26, கன்னியாகுமரி –
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் லூர்தம்மாள் சைமன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில், குமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் V. விஜய் வசந்த் MP அவர்கள் லூர்தம்மாள் சைமன் அவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன்போது, மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார் MC, நாகர்கோவில் மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் செல்வகுமார் பாலச்சந்திரன் MC, விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர். எஸ். ராஜன், பிரபு ஜெயபால் உள்ளிட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், மீன்வளத்துறையில் மறக்க முடியாத பங்களிப்பு செய்த லூர்தம்மாள் சைமன் அவர்களின் அரசியல் மற்றும் பொதுச் சேவை பணிகள் என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பவை எனக் கூறினர்.
குமரி மாவட்ட தமிழக விடியல் நிருபர் – பாவலர் ரியாஸ்.
