ஆக் 21, கன்னியாகுமரி
நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காணும் நோக்கில் மாண்புமிகு தமிழக முதல்வர், கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி நடத்தப்பட்ட “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம், வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் எதிர்புறத்தில் உள்ள S.K.M. மஹாலில் நடைபெற்றது.
இம்முகாமில் நாகர்கோவில் மாநகராட்சி 14 மற்றும் 15–வது வார்டு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது மனுக்களை சமர்ப்பித்தனர்.
குமரி கிழக்கு மாவட்ட செயலகரும், மாநகராட்சி மேயருமான ரெ. மகேஷ் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப. அவர்களுடன் இணைந்து முகாமை பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
முகாமில் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் ஆல்பர் மதியரசு, மாநகர் செயலாளர் திரு. ஆனந்த், மாநகர அவைத் தலைவர் திரு. பன்னீர்செல்வம், மண்டல தலைவர் திரு. ஜவஹர், மாமன்ற உறுப்பினர் திருமதி கலாராணி, மாநகர் துணைச் செயலாளர் திரு. வேல்முருகன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் திரு. C.T. சுரேஷ், வட்ட செயலாளர் திரு. ரஞ்சித், மற்றும் கழக நிர்வாகிகள் திரு. தன்ராஜ், திரு. ஜார்ஜ், திருமதி. ராணி, திருமதி. புஷ்பவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகளும் பங்கேற்று, பொதுமக்கள் முன்வைத்த பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
