Headlines
பழனியில் பொதுவெளியில் மனித கழிவுகளை வெளியேற்றுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.!

பழனியில்பொதுவெளியில் மனித கழிவுகளை வெளியேற்றுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.!

திண்டுக்கல் மாவட்டம் பழனி பைபாஸ் சாலையில் உள்ள இடும்பன் கோவில் பின்புறம் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் TN20 CP. 7129 சாமி செப்டிக் டேங்க் என்ற பெயர் கொண்ட செப்டிக் டேங்க் லாரி மூலமாக கழிவுநீரை நகர்புறங்களில் உள்ள பொதுவெளியில் வெளியேற்றுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக வீடியோவில் உரையாடும் நபர் இது வெறும் கை கழுவும் தண்ணீர் தான் பழனி தேவஸ்தானம் மூலம் இந்த தண்ணீரை அகற்றி வருகிறோம் என்பதாக கூறியுள்ளார்….

Read More
பழனி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வட மாநில வாலிபர் கைது, 2 கிலோ கஞ்சா பறிமுதல்

பழனி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வட மாநில வாலிபர் கைது, 2 கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த சாமிநாதபுரம் அருகே நல்லூரில் சதாசிவம் என்பவர் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து மில்லில் வேலை செய்து வந்த மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பாபுலால் மகன் சோனு (எ) ராஜ்சர்பா (29) என்பவர் வீட்டில் விற்பனைக்காக 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தார். இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோனு (எ) ராஜ்சர்பாவை கைது செய்து அவரது வீட்டில் இருந்த விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து…

Read More
1500 பயிற்சி ஆசிரியர்களை விருப்பத்தின் அடிப்படையில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை!

1500 பயிற்சி ஆசிரியர்களை விருப்பத்தின் அடிப்படையில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை!

1500 ஆசிரியர் பயிற்சி ஆசிரியர்களை விருப்பத்தின் அடிப்படையில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் மாநிலம் தழுவிய கால வரலாற்ற உண்ணா நிலை அறப்போராட்டத்தை மேற்கொள்வோம் என வளமைய பட்டதாரி ஆசிரியர்ஙள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் ராஜ்குமார் பேட்டி திண்டுக்கல் தனியார் மஹாலில் அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் ஐம்பெரும் விழா மாநில தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் 1500 பயிற்சி ஆசிரியர்களை…

Read More
பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை பாப்பம்மாள் காலமானார்

பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை பாப்பம்மாள் காலமானார்.

கோவை: பத்மஸ்ரீ விருது பெற்ற 108 வயதான பாப்பம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் பாப்பம்மாள் காலமானார். 2021ஆம் ஆண்டு இயற்கை விவசாய பணிக்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றார் பாப்பம்மாள்.

Read More
பழனி அருகே காட்டு யானைகளால் விவசாய பயிர்கள் சேதம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தல்…

பழனி அருகே காட்டு யானைகளால் விவசாய பயிர்கள் சேதம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தல்…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி நந்தவனம் அருகே சுரேஷ் என்பவர் நெல் நாற்று நடவு செய்து அறுவடை செய்யும் நிலையில் உள்ளன. மேலும் அருகில் சுப்புராஜ் என்பவருக்கு சொந்தமான 17 தென்னங்கன்றுகள் மற்றும் சடையப்பன் என்பவருக்கு சொந்தமான 29 தென்னங்கன்றுகளை ஏழு காட்டு யானைகள் புகுந்து நாசம் செய்துள்ளனர். தொடர்ந்து வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையிலும் கூட விவசாய பயிர்களை காட்டு யானைகள் கடும் சேதம் செய்துள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு…

Read More
பழனி மலைக்கோவிலில் தமிழக சட்டமன்ற உறுதிமொழி ஏற்புக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

பழனி மலைக்கோவிலில் தமிழக சட்டமன்ற உறுதிமொழி ஏற்புக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று தமிழக சட்டமன்ற உறுதிமொழி ஏற்புக்குழுவினர்ஜவருகைதந்தனர். சட்டமன்ற உறுதிமொழி ஏற்புக்குழு தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் பழனி மலைக் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பழனி மலைக்கோவில் அன்னதான கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சமையல் கூடத்தில் மேற்கொள்ளப்படும் சமையல் பணிகள் மற்றும் சமையல் கூடத்தின் சுகாதாரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் அன்னதான கூடத்தில் உணவருந்திய பக்தர்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து உறுதிமொழி ஏற்புக்குழுவினர் மாவட்ட…

Read More
உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலையில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது.!

உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலையில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது.!

சுற்றுலாவின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் விழிப்புணர்வு அளிக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் உலக சுற்றுலா தினமான செப்டம்பர் 27 நாளான இன்று உலக சுற்றுலா தினவிழா தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையின் சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உலக சுற்றுலா தின விழாவானது திருப்பூர் மாவட்டத்தில் திருமூர்த்தி மலையில் நடைபெற்றது. உலக சுற்றுலா தின விழா நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக, உடுமலை அரசு கலைக் கல்லூரியில் சுற்றுலா மற்றும் அமைதி என்ற கருப்பொருளில் மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார்…

Read More
காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

காரத்தொழுவுஅரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்முதலமைச்சர் கோப்பைக்கான ஹேண்ட் பால் போட்டியில் முதலிடம்.!

திருப்பூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான ஹேண்ட் பால் (கைப்பந்து) போட்டியானது உடுமலை எஸ்கேபி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் பள்ளிகளுக்கான மாணவர்கள் பிரிவில் அரசு மேல்நிலைப்பள்ளி காரத்தொழுவு மாணவர்கள் முதலிடம் பெற்றனர். மேலும் மாநில அளவிலான போட்டிக்கு மாணவர்கள் தேர்வாயினர். பயிற்சி கொடுத்த ஆசிரிய பெருமக்கள் விஜயன் மற்றும் கார்த்திகேயன் அவர்களுக்கும் வெற்றி பெற்ற பள்ளியின் மாணவர்களுக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் மற்றும் ஆசிரிய பெருமக்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு…

Read More
உடுமலை ஸ்ரீ ஜி. வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் 2 நாள் ஆய்வு

உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் 2 நாள் ஆய்வு

உடுமலை ஸ்ரீ ஜி.வி. ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் தேசிய தர நிர்ணய குழுவினர் (நாக்) 2 நாள் ஆய்வு நிறைவடைந்தது.உடுமலை ஸ்ரீ ஜி. வி. ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி 1952 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது 20 துறைகளுடன் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.கல்லூரியில் உடுமலை மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். இதுதவிர பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களைச் சார்ந்த மாணவியரும் பயில்கின்றனர். ஐந்தாவது…

Read More
உடுமலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

உடுமலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

உடுமலை வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சுருள் சங்கம், உடுமலை அரசு மருத்துவமனை, காவல்துறை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து உடுமலை நகரில் தூய்மை இந்தியா, போதை ஒழிப்பு, சாலைப் பாதுகாப்பு மற்றும் எச்ஐவி எய்ட்ஸ் விழிப்புணர்வு ஆகியவற்றை மையமாக கொண்டு பேரணி நடத்தினர். விழிப்புணர்வு பேரணியானது உடுமலை குட்டைத் திடலில் துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மத்திய பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது. இப்பேரணியை…

Read More