கன்னியாகுமரி; நவ. 14
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நெல்லிவிளை பகுதியில் இயங்கிவரும் ‘சாலமன் பனிக்கட்டி தொழிற்சாலை’க்கு சட்டபூர்வமான அனுமதி இல்லை என்றும், அது நிலத்தடி நீரை பாதிக்கிறது என்றும் உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மக்களின் இந்த குறைகளை நேரில் கவனித்து, பிரச்சினையை ஆய்வு செய்வதற்காக அப்பகுதிக்கு சென்று மக்களுடன் சந்தித்து பேசினார் நாம் தமிழர் கட்சி 2026 கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பி.வ. ஹிம்லர்.
அப்போது அவர் கூறியதாவது: “நெல்லிவிளை மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த பனிக்கட்டி தொழிற்சாலை தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நிலத்தடி நீரை பாதிக்கும் இத்தொழிற்சாலையை நிரந்தரமாக மூடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் தமிழர் கட்சி மேற்கொள்ளும்,” என்று அவர் உறுதியளித்தார்.
மக்களின் நீர்வளப் பாதுகாப்புக்கான கோரிக்கையை முன்னிறுத்தி உடனடி நடவடிக்கை எடுப்பதாக ஹிம்லர் தெரிவித்ததால், அப்பகுதி மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன்: ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர்: பாவலர் ரியாஸ்.
