குமரி மாவட்டம் நாகர்கோவில் குட் ஷெப்பர்ட் மேல்நிலைப்பள்ளியில், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவில் மாணவர்களுக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மாறுவேடப் போட்டிகள் ஆகியவை நடைபெற்றன. மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
விழாவிற்கு தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் விருது பெற்ற ஜார்ஜ் அவர்கள் தலைமையேற்றார். ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.
பல பெற்றோரும் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு சிறப்புக் கூட்டினர்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன்: ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர்: பாவலர் ரியாஸ்.
