விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் ஆட்டோ வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ராஜலட்சுமி என்பவருக்கு ஆட்டோ வாகனத்தினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தொழிலாளர் நலத்துறை இயக்குநர் எஸ்.ஏ.இராமன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று வழங்கினார். உடன் தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ், தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) மீனாட்சி உட்பட பலர் உள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில்.. மானியம் வழங்கும் திட்டம்..
