Headlines

உடுமலை மற்றும் மடத்துக்குளம் குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளிக்கு உரிய விலை இல்லாத காரணத்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

உடுமலை மற்றும் மடத்துக்குளம் குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளிக்கு உரிய விலை இல்லாத காரணத்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

செப் 07. உடுமலை

திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மானாவாரி மற்றும் இறவை பாசன பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது இப்பகுதிகளில் நாட்டுத் தக்காளி கொடி தக்காளி என பல்வேறு ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது .

தக்காளி சாகுபடி செய்ய நிலத்தைப் பதப்படுத்துதல் அளவு அடியுரம் நடவு களை பறித்தல் காய்கறிப் பயிர் பாதுகாப்பு என ஏக்கருக்கு 40 முதல் 50 ஆயிரம் வரை செலவு பிடித்து வருகிறது.

இங்கு உற்பத்தியாகும் தக்காளி ஒட்டன்சத்திரம் மதுரை திண்டுக்கல் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது தற்போது தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் விவசாயிகள் தக்காளியை நடுரோட்டில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது தற்போது பெட்டி ஒன்றுக்கு ரூ 200 முதல் 220 வரை விலை கிடைத்து வரும் நிலையில் பறிப்பு கூலி கூட கட்டுபடியாகாத விலை உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *