மத்திய பாஜக அரசு வாக்கு திருடியதை கண்டித்து கன்னியாகுமரி மாநகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் “ஒரு கோடி கையெழுத்து இயக்கம்” இன்று (வியாழக்கிழமை) தொடங்கப்பட்டது.
நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் நவீன்குமார் தலைமையேற்றார். பொதுமக்கள் இடையே பாஜக அரசின் எதிர்மறை செயல்பாடுகளை வெளிச்சமிட்டுக் காட்டும் வகையில் கையெழுத்து சேகரிப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் குமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். பின்னர் பொதுமக்களிடம் நேரடியாக கையெழுத்து பெற்று இயக்கத்திற்கு தொடக்கக் கண்ணியை அமைத்தார்.
மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், நகர முன்னாள் கவுன்சிலர்கள், இளைஞர் காங்கிரஸ், மகளிர் அணி, மாணவர் அணி உள்ளிட்ட பல்வேறு பிரிவினரின் உறுப்பினர்கள் அதிகளவில் பங்கேற்றனர்.
பாஜக அரசின் வாக்கு திருடல் நடவடிக்கைக்கு எதிராக மக்களின் குரலை ஒன்றிணைத்து நாடு முழுவதும் ஒரு கோடி கையெழுத்து சேகரிக்கப்படும் என மாநகர காங்கிரஸ் அறிவித்துள்ளது.
குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
