கோவை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பகுதி கழகச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைத்து சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் கூட்டம் மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் ஓரணியில் தமிழ்நாடு வாக்குச்சாவடி அளவிலான உறுதிமொழி முன்மொழி கூட்டங்கள் நடத்துவது பற்றியும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் எக்ஸ் எம்எல்ஏ மற்றும் மாவட்ட துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ் கல்பனா செந்தில் பொருளாளர் எஸ் எம் பி முருகன் தலைமைக் கழக பகுதி கழக செயலாளர்கள் மற்றும் சார்பானிகளின் அமைப்பாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
தமிழக விடியல் கோவை செய்தியாளர் : ல. ஏழுமலை
