செப் 3 கன்னியாகுமரி
கோட்டார், ஏழகரம்:
அருள்மிகு பொன்பொருந்தி நின்றருளிய பெருமாள் சுவாமி திருக்கோவில் ஆவணி பெருந்திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது.
திருத்தேரை இழுக்கும் நிகழ்வில், தமிழக வெற்றி கழகத்தின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். மாதவன், மாவட்ட இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் ராஜன், 38வது வார்டு வட்டச் செயலாளர் சபரீஷ் ஆகியோர் கழக நிர்வாகிகளுடன் இணைந்து பங்கேற்று, திருத்தேரின் வடம் தொட்டு இழுத்தனர்.
பெரும் பக்தி உற்சாகத்துடன் நடைபெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு இறைவனின் அருளைப் பெற்றனர்.
குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
