தமிழ்நாடு
போதைக்கு அடிமையான மகனிடமிருந்து உயிர் உடைமைகளை காப்பாற்றி தரக்கோரி ஓய்வுபெற்ற தம்பதியினர் கலெக்டரிடம் மனு.
மதுரை மாவட்டம், சமயநல்லூர் பகுதி ஊர்மெச்சிகுளம், விநாயகர்கோவில் தெருவைச்சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் குழந்தைசாமி மற்றும் அவரது மனைவி ஓய்வுபெற்ற செவிலியர் பாப்பா ஆகியோர், தங்களது உயிரையும் உடைமைகளையும் காப்பாற்றி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இது பற்றி தம்பதியினர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது, அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆன நிலையில், தங்களது மகன் போதைப் பொருள் மற்றும் மது பழக்கத்துக்கும் அடிமையாகி, தினந்தோறும் தங்களை…
கோவை மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் திரு மு. க.ஸ்டாலின் அவர்களின் எல்லோருக்கும் எல்லாம் என்கிற திட்டங்களின் அடிப்படையில், கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீ கோபால் நாயுடு உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற குழந்தைகளுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் பள்ளியின் தாளாளர் திரு. ரவி சாம் அவர்களுடன், கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திரு.துரை.செந்தமிழ் செல்வன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் ஆவாரம்பாளையம் பகுதிகழக பொறுப்பாளர் திரு.மோகன்ராஜ், மாமன்ற உறுப்பினர் திருமதி.அம்பிகா…
திருப்பரங்குன்றம் வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி.
திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிராக, தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் சென்னை ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. இதனையடுத்து தீபம் ஏற்றலாம் என்பது உறுதியாகி உள்ளது திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கை அரசு அரசியல் நோக்கில் அணுகியதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட அரசே காரணம் எனவும்…
தக்கலையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்: மாவட்ட ஆட்சியர் அழைப்பு.
கன்னியாகுமரி,ஜனவரி 6: தமிழ்நாட்டை நோயில்லாத மாநிலமாக மாற்றும் நோக்கில், முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் வரும் ஜனவரி 8, 2026 (வியாழக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.01.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த முகாமில் பொது மருத்துவம், இதயம், நரம்பியல், எலும்பு முறிவு,…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உலகம் உங்கள் கையில் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் இன்று(05.01.2026) நடைபெற்ற அரசு விழாவில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக முதல் கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் ”உலகம் உங்கள் கையில்” திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொர்ந்து, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள், எம்.வி.எம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இறுதி ஆண்டு…
தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவு சரியே! உறுதி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு.
திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைப்பு! திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைப்பு! தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு திருப்பரங்குன்றம் தீர்ப்பில் தமிழக அரசு அரசியல் நோக்கில் செயல்பட்டது பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட தமிழக அரசே காரணம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
அண்ணா பேருந்து நிலையத் தபால் நிலையத்தை மீண்டும் திறக்கக் கோரிக்கை: காங்கிரஸ் விவசாயப் பிரிவு முற்றுகைப் போராட்டம் அறிவிப்பு.
நாகர்கோவில், ஜனவரி 6: நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த வடிவீஸ்வரம் துணை தபால் நிலையம், நிர்வாகக் காரணங்களைக் கூறி நாகர்கோவில் டவுன் தபால் நிலையத்துடன் இணைக்கப்படுவதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்குத் தமிழக காங்கிரஸ் விவசாயப் பிரிவு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, மீண்டும் அதே இடத்தில் தபால் நிலையத்தைத் திறக்க வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாகத் தமிழக காங்கிரஸ் விவசாயப் பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
கடையநல்லூர் அருகே பயங்கரம்வீட்டு குளியலறையில் பெண்ணை குத்திக்கொன்று நகை கொள்ளை நாடகமாடிய என்ஜினீயர் அதிரடி கைது.
கடையநல்லூர் : ஜனவரி, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகேவீட்டு குளியலறையில் புகுந்து பெண்ணை சரமாரி குத் திக்கொலை செய்து நகையை கொள்ளைய டித்து விட்டு நாடகமா டிய என்ஜினீயரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொழிலாளி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சேர்ந்தமரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அருணாசலபுரம் சர்ச் தெருவை சேர்ந்தவர் அய்யங்கண்ணு துபாயில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முருக செல்வி (வயது 39) பீடி சுற்றும் தொழிலாளி இந்த தம்பதிக்கு 10…
கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்த இருவர் கைது.
விழுப்புரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலாமேடு அருகே உதவி ஆய்வாளர்கள் திரு.சண்முகம், திருமதி.பவித்ரா மற்றும் காவலர்கள் தலைமையில் ரோந்து பணியில் இருந்த போது சாலாமேடு பிரியதர்சினி நகர் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து சோதனை செய்ததில் கையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கண்டறிந்து எதிரிகளை நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த சம்பத் என்பவரின் மகன் ஸ்ரீ வெங்கட பிரசாத் (20) மற்றும் திருவெண்ணெய்நல்லூர்…
புதுச்சேரியில் இருந்து பேருந்தில் மதுபானங்கள் கடத்தி வந்த இருபெண்கள் கைது.
விழுப்புரம் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் உதவி ஆய்வாளர்கள் திரு.சுதன் மற்றும் திரு.நவநீதகிருஷ்ணன் ஆகிய இருவரும் ரோந்து பணியில் இருந்த போது விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக வந்த இரு பெண்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் இவர்கள் புதுச்சேரியில் இருந்து மதுபானங்களை விற்பனைக்காக எடுத்து வந்தது தெரியவர இதன் எதிரிகள் செஞ்சி மழவந்தாங்கல் மலையரசன் குப்பம் புது தெருவை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மனைவி தமிழரசி (60) மற்றும் அதே…
