செங்கோட்டை : ஜன-03
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனையானது மத்திய அரசினுடைய சிறந்த மருத்துவமனைக்கான காயகல்ப விருது முதல் பரிசினை பெற்றது குறிப்பிடத்தக்கது.
சுகாதாரமும் சுற்றுப்புற சூழலை பராமரிப்பதிலும் நோயாளிகளை தகுந்த சிகிச்சை அளித்து முறையாக கவனிப்பதிலும் மல்டி ஸ்பெஷாலிட்டி தனியார் மருத்துவமனைக்கு ஈடாக செங்கோட்டை அரசு மருத்துவமனை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த மருத்துவமனைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் உள் நோயாளிகளாகவும் புற நோயாளிகளாகவும் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்வது குறிப்பிடத்தக்கது.
இங்கு அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று மிகுந்த ஆரோக்கியத்தோடு செல்வது உள்ளபடியே பாராட்டுக்குரியது.
இங்கு உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு மருத்துவமனை வளாகத்தை சுத்தமாகவும் சுகாதாரமும் வைத்துக்கொள்ள முழு முயற்சியோடு செயல்பட்டு வருகின்றனர்.
இருப்பினும் இப்பகுதியில் தனி நபர்கள் சிலரின் மாடுகள், பன்றிகள், ஆடுகள் போன்ற விலங்கினங்களை மருத்துவமனை வளாகத்திற்குள் அனுப்பி கடந்த சில மாதங்களாக சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வண்ணம் செயல்பட்டு வருகின்றனர்.
இதனால் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் நோயாளிகளாக வருபவர்கள் குணம் பெற்று செல்லும் நிலையில் இதுபோன்ற சுகாதாரக் சீர் கேடுகள் பல நோய்களை உற்பத்தி செய்து விடும் என்ற அச்சம் பொதுமக்களிடம்..
