Headlines

Dhai Akhar கடிதம் எழுதும் போட்டியை ஆண்டுதொரும் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசுத்தொகை வழங்குகிறது இந்திய அஞ்சல் துறை.

Dhai Akhar கடிதம் எழுதும் போட்டியை ஆண்டுதொரும் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசுத்தொகை வழங்குகிறது இந்திய அஞ்சல் துறை.

இந்திய அஞ்சல் துறை அகில இந்திய அளவில் கடிதம்  எழுதும் பழக்கத்தை மாணவர்களிடமும், மக்களிடமும்  ஊக்குவிக்கும் விதமாக Dhai Akhar கடிதம் எழுதும் போட்டியை ஆண்டுதொரும் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசுத்தொகை வழங்குகிறது.

கடந்த வருடத்திற்கான 2024-2025 கடிதம் எழுதும் போட்டியில் பழனி

அக்‌ஷயா அகாடமி  பள்ளியை சார்ந்த மாணவி செல்வி. V தரணி ஸ்ரீ அவர்கள்  18 வயதுக்குட்பட்டவருக்கான அஞ்சல் உறையில் கடிதம் எழுதும் பிரிவில் மாநில அளவில் இரண்டம் இடம் பெற்றார். 

போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை கௌரவிக்கும் நிகழ்வு பழனி தலைமை அஞ்சலகத்தில் திண்டுக்கல் கோட்டக் கண்காணிப்பாளர் திரு வெ.பரமசிவம்  அவர்கள் தலைமையில் இன்று (21.05.2025) நடைபெற்றது.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு ரூபாய் 10,000/-  பரிசுத்தொகையையும், பாராட்டு சான்றிதழையும் திண்டுக்கல் கோட்டக் கண்காணிப்பாளர் திரு வெ.பரமசிவம் அவர்கள் வழங்கினார்,

வெ.பரமசிவம்

அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர்,

திண்டுக்கல் அஞ்சல் கோட்டம்,  திண்டுக்கல்- 624001.

குறிப்பு :

பொது மக்களின் ஆதார் சேவையின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் திண்டுக்கல் ,நிலக்கோட்டை, பழனி தலைமை அஞ்சலகங்கலில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை நேரம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வருகின்றது.

இந்த சேவையை பள்ளி செல்லும் குழந்தைகளும், பணிக்கு செல்பவர்களும் மற்றும் பொது மக்களும் பயன்படுத்தி பயன்பெறுமாறு திண்டுக்கல் கோட்டத்தின் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் திரு வெ.பரமசிவம் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *