57 வது தேசிய நூலக வார விழா உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் எண் 2ல் கொண்டாடப்பட்டது. நூலக தந்தை எஸ்,ஆர் ரங்கநாதன். திருவுருவப்படத்திற்கு வாசகர் வட்ட ஆலோசகர் உடுமலை செல்வி கேஸ் ஏஜென்சீஸ் உரிமையாளர் எம் பி அய்யப்பன் மாலை அணிவித்தார் . தொடர்ந்து தேசிய நூலக வாரவிழா புத்தக கண்காட்சியை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் இரண்டாம் நிலை நூலகர்.ரா பூரணி தலைமை வகித்தார். நூலகர்கள் மகேந்திரன் அஷ்ரப் சித்திகா பிரமோத் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
உடுமலை : நிருபர் : மணி