உடுமலையில் உள்ள பல்வேறு கோவில் மற்றும் பள்ளிகளில் இன்று விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடந்தது.
அக் 02. உடுமலை திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பல்வேறு கோவில்களில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு கட்டமாக இன்று 10 நாள் நிகழ்ச்சி விஜயதாசமியாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகிஷாசுரன் எனும் அரக்கனை தேவி பல்வேறு அவதாரங்கள் எடுத்து போரிட்டு இறுதியில் 10-ம் நாளில் மகிஷாசுரனை அளித்தார் என்பது புராண கால வரலாறு,வெற்றியின் நாளாக கருதப்படும் விஜயதசமி நாளில் தொடங்கப்படும் எந்த காரியமும் வெற்றியில் முடியும் என்பது மக்களில் நம்பிக்கை, அதன் படி…
