திருநெல்வேலி மேலப்பாளையத்தில், பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம், கருப்பு நாளாக அனுஷ்டிக்கப்பட்டது! முழு கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன!
திருநெல்வேலி,டிச.6:- கடந்த 1992- ஆம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர்.6) இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலமான பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. அவ்வாறு இடிக்கப்பட்டு, 33 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் கூட, முஸ்லிம் மக்கள் ஆண்டு தோறும், இந்நாளில் தங்களுடைய கண்டனத்தை, வெளிப்படுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில், பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான இன்று (டிசம்பர்.6) இந்நாள் கருப்பு தினமாகவும், பாசிச எதிர்ப்பு தினமாகவும், திருநெல்வேலி மேலப்பாளையத்தில், அனுஷ்டிக்கப்பட்டது. எஸ்டிபிஐ கட்சியின், திருநெல்வேலி மாநகர் மாவட்டம் சார்பாக, மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில்,…
