உலக முதியோர் தினம்..! திருநெல்வேலி சங்கர் நகரில், முதியோர்களுக்காக நடைபெற்ற, கட்டணமில்லா சிறப்பு மருத்துவ முகாம்.!
திருநெல்வேலி, செப். 28:- ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி “உலக முதியோர் தினம்” கொண்டாடப்படுகிறது. முதியோரின் பங்களிப்புகளை மதிப்பதும், அவர்களின் உரிமைகள் மற்றும் நலன்சார்ந்த விழிப்புணர்வை, மக்களிடம் ஏற்படுத்துவதுமே, இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். இந்த தினமானது, ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டு, உலக அளவில் கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில், திருநெல்வேலி தாழையூத்து, சங்கர் நகரில் உள்ள, சங்கர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப் பணித்திட்டம் ( NSS) சார்பாக, இன்று (செப்டம்பர். 28) காலையில்,…
