Headlines

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் பழுது: பயணிகள் அவதி.

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் பழுது: பயணிகள் அவதி

நாகர்கோவில், பிப்ரவரி 11:

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக எஸ்கலேட்டர் (நகரும் படிக்கட்டு) வசதி முடங்கியுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

குறிப்பாக, வழக்கமாக ஒன்றாவது நடைமேடையில் வரும் சென்னை – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த சில நாட்களாக மூன்றாவது நடைமேடைக்கு மாற்றப்பட்டதால், முதியவர்களும், அதிக உடைமைகளுடன் வருவோரும் படிக்கட்டுகள் வழியாக மேலே ஏறிச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதனால் வேறு வழியின்றிப் பயணிகள் போர்ட்டர்களை நாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பயணிகளின் நீண்ட நாள் புகாரை ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளாத நிலையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு எஸ்கலேட்டரைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக விடியல் செய்திகளுக்காக நாகர்கோவில் நிருபர் ராமகிருஷ்ணன்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *