Headlines

பழனி அருகே சாதியின் பெயரை சொல்லி தாய் மற்றும் மகன் மீது கொடூரத் தாக்குதல்..

பழனி அருகே சாதியின் பெயரை சொல்லி தாய் மற்றும் மகன் மீது கொடூரத் தாக்குதல்..

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பெரிய மொட்டுனுத்து என்ற கிராமத்தில் மாரிமுத்து என்பவரின் மனைவி தெய்வானை மற்றும் அவரது மகன் மாயகிருஷ்ணன் ஆகியோர் வசித்து வருகின்றனர்..

தொடர்ந்து அப்பகுதியில் நடு இரவு நேரத்தில் வசந்த்,மற்றும் துர்க்கைராஜ் ஆகிய இருவரும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அருந்ததியினர் குடியிருப்பு பகுதிக்குள் புல்லட்டில் வந்து வெடிவைத்து புல்லட்டில் இருந்து அதிகப்படியான ஒலியை எழுப்பியுள்ளனர்.

சத்தம் தங்க முடியமல் வீட்டை விட்டு வெளியே வந்த தெய்வானை அவரது மகன் மாயகிருஷ்ணன் இருவரும் ஏன் இப்படி செய்கீரீர்கள் என்று கேள்வி கேட்ட நிலையில் தெய்வானை மற்றும் அவரது மகன் மாயகிருஷ்ணன் ஆகிய இருவரையும் சாதியின் பெயரை சொல்லி கொடூரமாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்..

மேலும் இருவரையும் சரமாரியாக தாக்கி விட்டு புல்லட்டில் அத்தெருவின் வழியாக வலம் வந்து சென்றுள்ளார்கள். தொடர்ந்து படுகாயங்களுடன் காணப்பட்ட இருவரையும் சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் தெய்வானை நெஞ்சு வலியின் காரணமாக வலி தாங்க முடியாமல் துன்பப்பட்டு வருகின்றார். விரைந்து வந்த சாமிநாதபுரம் காவல் துறையினர் இந்நிகழ்வு பற்றி விசாரித்துள்ளனர்.

இச்சம்பவம் வைரலாக பரவவே தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் இரணியன் மற்றும் கார்த்திக் சுதன், விஜய் பெருமாள், சிவமணி, சந்தோஷ், குருநாதன், பாராளுமன்ற தொகுதி செயலாளர் தர்மராஜ் மற்றும் லட்சுமணன், இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட தலைவர் ஆறுமுகம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சிவராஜ் துணை செயலாளர் குமரேசன்
உள்ளிட்டோர் விரைந்து வந்து இந்நிகழ்வு பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்ந்து சாதியின் பெயரால் கொடூர தாக்குதல் நடத்திய வசந்த் மற்றும் துர்க்கை ராஜ் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அனைத்து கட்சி நிர்வாகிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொடர்ந்து பழனி சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி சாதியின் பெயரால் கோரத்தாண்டவம் நடைபெற்று வருவது தொடர் கதையாகி வருகின்றன…

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *