இளங்கடை கச்சேரி சாலை: டிப்பர் லாரிகளின் அட்டகாசம் — மக்கள் அவதி
குடியிருப்பு பகுதி சாலை கனரக வாகனங்களால் சேதம் இருபுறமும் வீடுகள் நிறைந்த குடியிருப்பு பகுதியாக உள்ள இளங்கடை கச்சேரி சாலை, பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக தார் சாலையாக அமைக்கப்பட்டது. முன்பு கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் மட்டுமே இயங்கிய இந்த சாலையில், கடந்த சில மாதங்களாக டாரஸ் மற்றும் டிப்பர் லாரிகளின் தொடர்ச்சியான போக்குவரத்து அதிகரித்துள்ளது. அதிகாலை முதல் இரவு வரை லாரி ஊர்வலம் அதிகாலை நேரத்திலேயே தொடங்கும் லாரி போக்குவரத்து, நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களை…
