பழனியில் மத்திய அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அங்கம் வகிக்கும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழனி தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சித்ததாகவும், இதையடுத்து மத்தியஅரசை கண்டித்தும், அதற்கு துணை போவதாக கூறி அதிமுக வை கண்டித்தும் கணடன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக நகர செயலாளர் வேலுமணி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு…
