இதழ்கள்
விழுப்புரம் மாவட்ட காவல்துறை ரோஷனை காவல் நிலையம்.. தனியார் டீ கடையில் தம்பதிகள் தவறவிட்ட 18 சவரன் தங்க நகைகளை மீட்டு அவர்களை வியப்பில் ஆழ்த்திய நெடுஞ்சாலை ரோந்து போலீசார்…
தாம்பரம் லட்சுமிபுரத்தில் வசிக்கும் சந்திரசேகர் என்பவரின் மனைவி பிரசாந்தி(30) என்பவர் திருவண்ணாமலையில் தனது உறவினர் சுப நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பும் போது திண்டிவனம் அடுத்த தனியார் டீ கடை அருகே தனது காரை நிறுத்தி டீ அருந்தி விட்டு செல்லும்போது தனது கையில் வைத்திருந்த கைப்பையை டீக்கடையிலேயே மறந்து வைத்து விட்டு சென்றதாகவும் அதில் 18 சவரன் தங்க நகை மற்றும் லேப்டாப் ஆகியவை இருந்ததாக கொடுத்த தகவலின் பேரில் நெடுஞ்சாலை ரோந்து எண் -1…
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம்
கார்த்திகைத் திருநாளையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளது. காவல் துறை முழு பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை எழுமலையைச் சேர்ந்த ராமரவிக்குமார் தொடர்ந்த வழக்கில் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
உலக தமிழர்களின் பார்வைக்கு விரைவில் வருகிறது! நெல்லையில் 67 கோடி ரூபாய் மதிப்பில் அமையும் பொருநை அருங்காட்சியகம்! டிசம்பரில் முதல்வர் திறந்து வைக்கிறார்! தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திருநெல்வேலியில் பேட்டி!
திருநெல்வேலி,டிச.1:- தமிழக நிதி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இன்று ( டிசம்பர்.1) திருநெல்வேலியில், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-“தமிழர்களின் தொன்மை நாகரிகத்தை, உலகிற்கு பறைசாற்றும் வகையில், திருநெல்வேலியில் மொத்தம் 67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும், “பொருநை அருங்காட்சியகம்” பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து விட்டன இந்த மாதம் (டிசம்பர்) “முதலமைச்சர்” மு.க.ஸ்டாலின் இதனை திறந்து வைக்கிறார்.தமிழ் பெருங்குடி மக்களின் தொன்மை நாகரிகத்தை, உலகிற்கு பறைசாற்றும்…
SIR பணியில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் பணியாளர்களை மிரட்டுவது சம்பந்தமாக உண்மைத் தன்மை கண்டறிய பாஜக களப்பணி.
திண்டுக்கல் : டிசம்பர்,01 திண்டுக்கல் பாரதிய ஜனதா கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் ஜி நேற்றைய தினம் SIR குறித்து முறைகேடுகள் நடைபெற்றதாகவும் BLO பணியாளர்களை மிரட்டுவதாகவும் செய்திகள் வந்ததைத் தொடர்ந்து தாசில்தாரிடமும் அழைத்து நிலவரத்தை கேட்டறிந்தார் அவர் கூறியது பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மேலும் 11.12.25 கால அவகாசங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிடும்படி 15 ஜனவரி மாதம் வரை பட்டியல் சீர்திருத்தம் நடைபெறும் என்றும் அதைத்தொடர்ந்து…
புதிய பேருந்துகள் துவக்க விழா அமைச்சர் கே.கே.எஸ் எஸ்.ஆர் பங்கேற்பு.
தென்காசி டிசம்பர் 1 தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்துகள் ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் 14 புதிய பேருந்துகள் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏகே கமல் கிஷோர் ஆகியோர் கலந்துகொண்டு புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தனர் நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக…
திருநெல்வேலியில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு!மெழுகுவர்த்தி ஏந்தி, புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது!
திருநெல்வேலி,நவ.30:- தமிழீழ விடுதலைப் போராட்ட களத்தில் “வீர மரணம்” அடைந்த ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளாக, “முதல் களப் போராளி” சங்கர் மறைந்த நவம்பர் 27 தொடங்கி, ஒரு வார காலத்துக்கு “மாவீரர் நாள்” கடைபிடிக்க தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் 1989- ஆண்டில் கட்டளை பிறப்பித்தார். அது முதல் “மாவீரர் நாள்” உலகம் முழுவதும் வாழுகின்ற தமிழர்களால், கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில், இந்த நாளில் திருநெல்வேலி மாவட்டம் “தமிழக மக்கள் முன்னேற்ற…
திருநெல்வேலியில், தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவனர்- தலைவர் ஜான்பாண்டியன், பிறந்த தினவிழா! தங்க மோதிரம், பரிசு பெட்டகம், அன்னதானம் வழங்கி, கொண்டாட்டம்!
திருநெல்வேலி,நவ.30:- “தமிழின வேந்தர்” பெ.ஜான் பாண்டியனின், பிறந்தநாளை முன்னிட்டு, தங்க மோதிரம், பரிசு பெட்டகம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி, இன்று ( நவம்பர்.30) திருநெல்வேலியில், நடைபெற்றது. பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியில் உள்ள, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இன்று (நவம்பர்.30) பிறந்த குழந்தைகளுக்கு, “தங்க மோதிரம்” மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய “பரிசு பெட்டகம்” ஆகியவற்றை, கண்மணிமாவீரன் வேளாளர் தலைமையில்,மாநில இளைஞர் அணி தலைவர் ஜா.வியங்கோ பாண்டியன் வழங்கி, குழந்தைகளை வாழ்த்தினார். தொடர்ந்து, மனக்காவலம்…
இளம்பென் தலை துண்டித்து படுகொலை
கடலூர் மாவட்டம் காட்டுக்கூடலூரை சேர்ந்தவர் கோபலகிருஷ்ணண். இவரது மனைவி தமிழரசி வயது (35). இவர், தன் கணவரின் தம்பி இருவரும் தனக்கு பாலியல் துன்புறுதல் கொடுப்பதாக சிதம்பரம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்தது போலீசார் முருகானந்தம் என்பவரை கைது செய்த நிலையில், மற்றொரு தம்பியான பாலகிருஷ்ணன் நேற்று (நவ 30)தமிழரசியின் தலையை துண்டித்துபடுகொலை செய்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் : R. விக்னேஷ்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டிச.20- ஆம் தேதி நெல்லை வருகை! 57 கோடி ரூபாய் மதிப்பில் 13 ஏக்கரில் 54 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள, பொருநை அருங்காட்சியம் கட்டிடத்தை, திறந்து வைக்கிறார்! நெல்லையில் பேட்டி அளித்த, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தகவல்!
திருநெல்வேலி,நவ.28:- திருநெல்வேலியில், மொத்தம் 56 கோடியே, 60 லட்சம் ரூபாய் மதிப்பில், 13 ஏக்கரில், 54 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த, “பொருநை அருங்காட்சியகம்” கட்டுமான பணிகளை, நகர்ப்புற உள்ளாட்சித் துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு, இன்று ( நவம்பர். 28) காலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா சுகுமார், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் மோனிகா…
திருநெல்வேலி மாவட்டம், காரியாண்டி கருமேனியாறு நீர்த்தேக்கத்திலிருந்து, நடப்பு பிசானப்பருவம் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்த, சபாநாயகர் அப்பாவு!
திருநெல்வேலி,நவ.27:- பருவமழை காலங்களில், வீணாக கடலில் கலக்கும் உபரிநீரை, திருநெல்வேலி மற்றும் தூத்துகுடி மாவட்டங்களில், எட்டு வட்டங்களில் வறண்ட நிலையில் உள்ள பாசன நிலங்களுக்கு திருப்பி விடும் வகையில் மொத்தம் 1060 கோடி ரூபாய் மதிப்பில், அணமையில் முதலமைச்சரால் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட, வெள்ளநீர் கால்வாய் கால்வாய் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி காரியாண்டியில் உள்ள, “கருமேனியாறு” நீர்த்தேக்கத்திலிருந்து, இன்று (நவம்பர். 27) காலையில், தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் ( சபாநாயகர்) மு. அப்பாவு, மாவட்ட…
