Headlines

புதிய நியாய விலைக் கடை திறப்பு விழா.

புதிய நியாய விலைக் கடை திறப்பு விழா.

ஊட்டி பிப்ரவரி
நீலகிரி மாவட்டம், உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர். கணேஷ் எம் .எல். ஏ அவர்களின் தொகுதி மேம்பாடு நிதியின் கீழ் (2024 -2025) 27 வது வார்டு தீட்டுக்கல் பகுதியில் நியாய விலை கடை கட்டப்பட்டது.

இப்பகுதி பொதுமக்கள் கடந்த ஐம்பது ஆண்டு காலமாக மூன்று நான்கு கிலோ மீட்டர் தூரம் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வந்தார்கள். இப்பிரச்சினைக்கு தீர்வு காண 27ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் திருமதி. ஆர். ஜெயலட்சுமி சுதாகர் கடும் முயற்சி மேற்கொண்டார். இவரது தீவிர முயற்சியின் பலனாக ரூபாய் ஏழு லட்சம் ஒதுக்கப்பட்டு, பணி நிறைவு பெற்றது.

நகராட்சி ஒப்பந்ததாரர் நந்தக்குமார் நியாய விலை அங்காடியை கட்டி நிறைவு செய்து கொடுத்தார். ரேஷன் கடை திறப்பு விழா 27 -2- 2026 வெள்ளிக்கிழமை அன்று, காலை 9 மணிக்கு ஜெயலட்சுமி சுதாகர் முன்னிலையில் வெகு விமர்சையாக நடந்தது.

சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் நகர் மன்ற தலைவி வாணீஸ்வரி, நகர மன்ற உறுப்பினர் நாதன், நகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர் ஊழியர்கள், தீட்டுக்கல் சுரேஷ், சந்திரன், சங்கர், தேவராஜ், ரக்ஷன், பால சுப்ரமணி, பாஸ்கர் மற்றும் திரளான ஊர் மக்கள் கலந்து கொண்டார்கள். பொது மக்கள் நகர மன்ற உறுப்பினர் ஆர். ஜெயலட்சுமி சுதாகர் அவர்களுக்கு தங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துப் பாராட்டினார்கள்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *