அண்ணா பேருந்து நிலையத் தபால் நிலையத்தை மீண்டும் திறக்கக் கோரிக்கை: காங்கிரஸ் விவசாயப் பிரிவு முற்றுகைப் போராட்டம் அறிவிப்பு.
நாகர்கோவில், ஜனவரி 6: நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த வடிவீஸ்வரம் துணை தபால் நிலையம், நிர்வாகக் காரணங்களைக் கூறி நாகர்கோவில் டவுன் தபால் நிலையத்துடன் இணைக்கப்படுவதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்குத் தமிழக காங்கிரஸ் விவசாயப் பிரிவு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, மீண்டும் அதே இடத்தில் தபால் நிலையத்தைத் திறக்க வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாகத் தமிழக காங்கிரஸ் விவசாயப் பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
