திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் வி.ஏ.ஓ. கைது!
பட்டா மாறுதலுக்காக 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, கையும்-களவுமாக பிடிபட்டார்! திருநெல்வேலி, செப்.23:- நிலம் பட்டா மாறுதலுக்காக, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி (V.A.O) கைது செய்யப்பட்டார். அது பற்றிய விபரம் வருமாறு:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மனைவி விஜயா. பாஸ்கரின் தந்தை அய்யங்கண்ணு என்பவருக்கு சொந்தமான நிலத்தை, தன்னுடைய கணவர் பாஸ்கர் பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக, விஜயா விண்ணப்பித்து…
