உள்ளூர் வேலைவாய்ப்பு கோரி கூடங்குளத்தில் சாலை மறியல்.
NPCIL ஆட்சேர்ப்பில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய நுழைவுவாயில் முன்பு, நிரந்தர பணியிடங்களில் உள்ளூர் பகுதி மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, பொதுமக்கள் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள், அணுமின் நிலையம் அமைந்துள்ள கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த தகுதியான இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பதிலாக வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். அணுமின் நிலையம் செயல்பட்டு…
