தக்கலையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்: மாவட்ட ஆட்சியர் அழைப்பு.
கன்னியாகுமரி,ஜனவரி 6: தமிழ்நாட்டை நோயில்லாத மாநிலமாக மாற்றும் நோக்கில், முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் வரும் ஜனவரி 8, 2026 (வியாழக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.01.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த முகாமில் பொது மருத்துவம், இதயம், நரம்பியல், எலும்பு முறிவு,…
