நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக சந்திப்பு ரவுண்டானா பா.ஜ.க-விற்கு மட்டும் பிரத்தியேகமானதா? – மாற்று கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சரமாரி கேள்வி!
நாகர்கோவில்,ஏப் 15: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பில் அமைந்துள்ள ரவுண்டானாவில் பாரதிய ஜனதா கட்சியின் கொடிகள் மற்றும் பதாகைகள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் மாற்று கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து கேள்வியெழுப்பியுள்ளனர். விதிமுறைகளில் பாரபட்சமா? பொதுவாக, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்ற முக்கிய சந்திப்புகளில் எந்தவொரு அரசியல் கட்சியும் தங்களது கட்சிக் கொடிகளையோ அல்லது பதாகைகளையோ வைப்பதற்கு குமரி மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதி…
